Saturday, June 25, 2011

இஸ்லாத்தை நோக்கி டோனி பிளேர்!



இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஐ.நா மற்றும் ஐரோப்பிய யூனியன் தூதராக செயல்பட்டு வருகிறார். கிறிஸ்தவரான டோனி பிளேர் எந்த மதத்தின் மீதும் பற்று இல்லாமல் இருந்தார். தற்போது அவர் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குரானை தினந்தோறும் படித்து வருகிறார்.
இதுகுறித்து டோனி பிளேர் கூறியதாவது: குரானை படிப்பதால் நம்பிக்கையுள்ளவனாக இருக்கிறேன். சர்வதேச அளவில் செயல்பட நம்பிக்கையுடையவனாக இருக்க வேண்டும். அதற்காக தினந்தோறும் குரான் படிக்கிறேன். உலக நடப்புகளை புரிந்து கொள்ளவும்,
குரான் போதனைகள் உதவுகிறது. இது ஒரு சீர்திருத்த புத்தகம். இதில் எல்லா விஷயங்களும் உள்ளன. அறிவியலை போற்றி, மூட நம்பிக்கைகளை நீக்கச் செய்கிறது இவ்வாறு டோனி பிளேர் கூறியுள்ளார்.

ரஜினிக்கு என்ன ஆச்சு....?



நாளுக்கு நாள் நடிகர் ரஜினிகாந்த் செய்து வரும் காமெடியை பார்க்கும் போது தான் எனக்கு இப்படி தலைப்பிட தோன்றிற்று.

கடந்த கால தேர்தலில் அவர் பேசிய வார்த்தைகளையும் இப்போது அவர் கூறும் கருத்துகளையும் பார்க்கும் பொது அவர் சென்றிருக்க வேண்டியது சிங்கப்பூர் அல்ல சென்னை கீழ்ப்பாக்கம் என்று நீங்களே சொல்லுவீர்கள்.

கடந்த கால தேர்தலில் “ மறுபடியும் இந்த ஜெயலலிதா ஜெயிச்சா இனி இந்த தமிழ் நாட்டை ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது “ என்று அரைகூவல் விட்டவர் தான் இந்த ரஜினிகாந்த் .தற்பொழுது உடல் நிலை சரியானதும் சிங்கப்பூரில் இருந்து தொலைபேசி மூலம் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் பேசும் போது “ சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றிருப்பதன் மூலம் தமிழகம் காப்பாற்ற பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்”.


மேலும் அவர் காமெடி இதோடு முடியவில்லை ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போட்டு முடித்துவிட்டு பின்னர் தொலைகாட்சிக்கு கொடுத்த பேட்டியில் அப்படி இப்படின்னு பேட்டி கொடுத்துட்டு கடைசில அவர் யாருக்கு ஓட்டு போட்டார்னு வெளிச்சத்திற்கு வந்த பின்னாடியும் வெட்கமே இல்லாமல் அடுத்த நாள் கருணாநிதியுடன் உட்க்காந்து பொன்னர்சங்கர் படம் பார்த்து பாதில அவமானப்பட்டு வெளிய வந்தவர் தான் இந்த சூப்புன ஸ்டார் ரஜினிகாந்த். ஏற்கனவே ரஜினிகாந்த் மேல கடுங்காட்டத்துல இருக்கிறது திமுக இந்த லட்சணத்துல அம்மாவால தமிழ்நாடு காப்பற்றப் பட்டுல்லதுன்னு அம்மாகிட்ட பேசிட்டு . கலைஞருக்கு போன் பண்ணி “ நீங்கள் வாழ்வில் பல ஏற்றத்தாழ்வுகள், மேடு பள்ளங்களையெல்லாம் சந்தித்தவர் .உங்கள் உடல் நலம் பேணுவதுதான் முக்கியம்.எது பற்றியும் பெரிதாகக் கருதாமல் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இப்படி தன்னுடைய சுயநலத்திற்காக மாறி மாறி பேசிவருபவரை நாம் வேறென்ன தலைப்பிட்டு சொல்ல முடியும்.

உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு என்று ரஜினி ரசிகர்கள் கூறி திரிவதும்அவர் படம் வெளியாகும் போது கட்டவுட்டுக்கு பால் அபிசேகம் செய்வதுமாகதங்கள் குடும்பங்களை கவனிக்காமல் சீரழிந்த குடும்பங்கள் எத்தனை. இதுபோல் கூத்துக்கள் உலகில் எந்த நாட்டிலும் நடக்காதுஇந்த போன்ற கொடுமைகளை குறிப்பாக தமிழகத்திலேயே பார்க்க முடிகிறது. இனியாவது திருந்துவார்களா...??? இது போன்ற மக்கள் ....?????

கண்களில் ஏன் இந்த கண்ணீர் அது யாராலே..? – கருணாநிதி

தன் மகள் கனிமொழியை, தி.மு.க., தலைவர் கருணாநிதி டில்லி, திகார் சிறையில் சந்தித்து, கண்ணீர் மல்க ஆறுதல் தெரிவித்தார். கனிமொழியை கண்டதும், தன் கறுப்புக் கண்ணாடியை கழற்றிவிட்டு பார்த்தபோது, கண்ணிலிருந்து, தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்தது. கனிமொழியை தனியாக 15 நிமிடங்கள் சந்தித்தார் கருணாநிதி. ராஜா, சரத்குமார் ரெட்டி ஆகியோரையும் சந்தித்துப் பேசினார். 


பழம் அதிகமா பழுத்தால் அழுகிவிடும் .. அதிலும் நீங்கள் பழுத்த பழம் அல்லவா ஊழலில் அதுனால் அழுது விட்டீர்களோ என்னவோ....



காவிரி ஆறே கஞ்சியா ஆனாலும் நாய்க்கு நக்கித்தான் குடிக்கனும். அதிமாதிரி தான் யாராகா இருந்தாலும் தன் மகள் சிறையில் இருப்பதை பார்க்கும் பொழுது கண்களில் ஏற்படும் கண்ணீர் இயற்கையானதே.. இதை ஒரு செய்தியாக போடுவதில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும்.  தன் மகள் சந்திப்பிற்கு பிறகு பத்திரிக்கைகளுக்கு “கனிமொழிக்கு உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளார். சரத்குமார்சிறையில் பலவீனமாக காணப்பட்டார். கனிமொழியை மனிதாபிமானமற்ற முறையில் சிறையில் அடைத்துள்ளனர் “ என்று ஒரு பேட்டி கொடுத்தீர்களே இப்பொழுது தான் உங்களுக்கு இது மனிதாபிமானமற்ற செயலாக தெரிகிறதா..?? கோவை குண்டு வெடிப்பு வழக்கில் என் சமுதாய சகோதரர்களை விசாரணை கைதிகளாகவே பல வருடம் வைத்தீர்களே அப்பாழுது அவர்கள் குடும்பம் வடித்த கண்ணீரை பார்க்கும் பொழுது உங்களுக்கு மனிதாபிமானமற்ற செயலாக தெரியவில்லையா..?. இலங்கையில் நம் தமிழ் மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவிப்பதை கண்டும் கை கட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்த்துவிட்டு பிறகு உண்ணாவிரதம் இருப்பதாக போலி நாடகம் ஒன்று நடத்தினீர்களே அப்பொழுது எங்கே போனது உங்கள் மனிதாபிமானம்

கடைசியா ஒன்னு சொல்றேன் “ என்னதான் பத்து LIFE BOY  சோப்பு குளிச்சாலும் காக்கை வெள்ளை ஆவாது அது மாதிரி தான் இனி நீங்க