கடந்த கால தேர்தலில் அவர் பேசிய வார்த்தைகளையும் இப்போது அவர் கூறும் கருத்துகளையும் பார்க்கும் பொது அவர் சென்றிருக்க வேண்டியது சிங்கப்பூர் அல்ல சென்னை கீழ்ப்பாக்கம் என்று நீங்களே சொல்லுவீர்கள்.
கடந்த கால தேர்தலில் “ மறுபடியும் இந்த ஜெயலலிதா ஜெயிச்சா இனி இந்த தமிழ் நாட்டை ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது “ என்று அரைகூவல் விட்டவர் தான் இந்த ரஜினிகாந்த் .தற்பொழுது உடல் நிலை சரியானதும் சிங்கப்பூரில் இருந்து தொலைபேசி மூலம் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் பேசும் போது “ சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றிருப்பதன் மூலம் தமிழகம் காப்பாற்ற பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்”.
மேலும் அவர் காமெடி இதோடு முடியவில்லை ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போட்டு முடித்துவிட்டு பின்னர் தொலைகாட்சிக்கு கொடுத்த பேட்டியில் அப்படி இப்படின்னு பேட்டி கொடுத்துட்டு கடைசில அவர் யாருக்கு ஓட்டு போட்டார்னு வெளிச்சத்திற்கு வந்த பின்னாடியும் வெட்கமே இல்லாமல் அடுத்த நாள் கருணாநிதியுடன் உட்க்காந்து பொன்னர்சங்கர் படம் பார்த்து பாதில அவமானப்பட்டு வெளிய வந்தவர் தான் இந்த சூப்புன ஸ்டார் ரஜினிகாந்த். ஏற்கனவே ரஜினிகாந்த் மேல கடுங்காட்டத்துல இருக்கிறது திமுக இந்த லட்சணத்துல அம்மாவால தமிழ்நாடு காப்பற்றப் பட்டுல்லதுன்னு அம்மாகிட்ட பேசிட்டு . கலைஞருக்கு போன் பண்ணி “ நீங்கள் வாழ்வில் பல ஏற்றத்தாழ்வுகள், மேடு பள்ளங்களையெல்லாம் சந்தித்தவர் .உங்கள் உடல் நலம் பேணுவதுதான் முக்கியம்.எது பற்றியும் பெரிதாகக் கருதாமல் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இப்படி தன்னுடைய சுயநலத்திற்காக மாறி மாறி பேசிவருபவரை நாம் வேறென்ன தலைப்பிட்டு சொல்ல முடியும்.
இப்படி அடுத்தவங்க செய்தியை திருடுறது ஒரு பிழைப்பா ....? குறைந்தது எங்க இருந்து சுட்டதுனாவது போடா வேண்டாம் ....
ReplyDelete