Health

New Medicine for Cancer form KSA scientists

உலகம் முழுவதும் புற்றுநோய்க்கு 60 லட்சம் பேர் பலியாகி வருகிறார்கள். அரபு நாடுகளில் மாரடைப்புக்கு பிறகு இந்த நோய்க்குதான் அதிகம் பேர் பலியாகி வருகிறார்கள். இந்த நோயை குணப்படுத்துவதற்கு இப்போது மருந்து கிடையாது. அதை கட்டுப்படுத்துவதற்கு மட்டுமே மருந்து உள்ளது. குணப்படுத்துவதற்கான மருந்தை அரபு நாட்டு உயிரி தொழில் நுட்பக்கம்பெனியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். அவர்கள் இந்த மருந்தை ஒட்டகப்பால் மற்றும் அதன் சிறுநீரகம் ஆகியவற்றை பயன்படுத்தி தயாரித்து உள்ளனர். இந்த மருந்தை புற்றுநோய் தாக்கிய எலிகளுக்க கொடுத்து பரிசோதித்துபார்த்தனர். கடந்த 6 மாதங்களாக இந்த மருந்தை ஊசி மூலம் எலிகளின் உடலில் செலுத்தப்பட்டது. இந்த பரிசோதனையில் 100 சதவீத வெற்றி கிடைத்துள்ளது. நோய் குணமானதோடு புதிய செல்களும் உருவாகி எலிகள் புதிய உத்வேகத்தோடு உள்ளன. இதனால் இந்த மருந்தை மனிதர்களுக்கு கொடுத்து சோதனைசெய்ய இருக்கிறார்கள். இநத மருந்து லுமேனியா எனப்படும் ரத்தப்புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்துகிறது என்றும் மற்ற வகை புற்றுநோய்களை குணப்படுத்துவதற்கு மருந்துகள் உருவாக்கப்படவேண்டும் என்று கூறப்படுகிறது.

ஆரோக்கியமான உலகுக்கு தூய்மையான தண்ணீர்

"உண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை." (அல்குர்ஆன்7:31)
உலகப் பரப்பில் முக்கால் பகுதி தண்ணீர் தான் என்றாலும் அதில் மக்களுக்குப் பயன் படக்கூடிய  சுத்த நீரின் விகிதம் மிகக் குறைவு. பூமி பரப்பில் நீரின் இருப்பு 71 விழுக்காடாக அமைந்திருந்தாலும், பயன்படத்தக்க நீரின் அளவு 0.26 விழுக்காடு என்ற மிக சொற்ப அளவாகவே உள்ளது.
உலகப் பரப்பில் முக்கால் பகுதி தண்ணீர் தான் என்றாலும் அதில் மக்களுக்குப் பயன் படக்கூடிய  சுத்த நீரின் விகிதம் மிகக் குறைவு. உட்கொள்ளத் தக்க சுத்தமான நீர் என்பது - கானல் நீராகி வருகின்றது. சுத்தமான நீரை - அசுத்தம் செய்யும் நாம் அனைவருமே சமுதாயக் குற்றவாளிகள்தான். எதிர் காலச் சந்ததியினருக்கு, நாம் இந்த உலகில் பிறந்தபோது காற்றும் நீரும் எவ்வளவு சுத்தமாக இருந்ததோ அதை அதே அளவு சுத்தமாக அல்லது அதைவிடச் சுத்தமாக நம்மால் விட்டுப் போக முடியவில்லை.
தண்ணீரின் பயன்பாடு மற்றும் தூய்மையை பாதுகாத்தல் போன்றவற்றில் நாடுகளை ஆளும் அரசுகளும், பொதுமக்களும் அதி முக்கியத்துவம் அளித்தாலன்றி எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவியலாது என்பதுதான் உண்மை. மனித சமூகம் ஏற்படுத்தும் கெடுதிகளால் இன்று தண்ணீரின் தன்மை மாசுபட்டு மனித சமூகம் பெரும் அபாயத்தை நோக்கி நிற்கிறது.                       மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க நீரின் தேவையும் அதிகரிக்கத்தானே செய்யும்? வாழ்க்கை முறைகளால் அதிகரித்த நீர்த் தேவையுடன்,  நீரில் கலக்கும் பூச்சி கொல்லிகள், மற்ற ரசாயனங்கள், இவை தவிர மக்கள் பண்ணும் அசுத்தங்கள் சொல்லி மாளாது.
இந்த அசுத்தப் படுத்தும் நடவடிக்கைகளை நாம் குறைத்துக் கொள்ளாவிட்டால், நம் சந்ததியினர் குடி தண்ணீருக்கு மட்டும் தம் நாளின் பெரும் பகுதியை செலவழிக்க நேரும். தண்ணீருக்காக சமூகத்தின் ஒரு பகுதியினர் அல்லலுறும் பொழுது இன்னொரு பகுதி தண்ணீரை விரையம் செய்வதிலும், மாசுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் கொடுமை நிகழ்ந்தேறுகிறது.
கடல்,ஆறு,குளம்,குட்டை,கிணறு என எல்லாவிதத் தண்ணீர் நிலைகளும் மாசுபடுத்தப்பட்டே வருகின்றன.தண்ணீர் மனிதனைப் படைத்த வல்ல இறைவனின் அருட்கொடைகளில் மகத்தானது. இறைவன் கூறுகிறான்:
"உங்களை அதைக்கொண்டு தூய்மைப்படுத்துவதற்காகவும் அவனே வானத்திலிருந்து உங்கள் மீது மழையையும் இறக்கி வைத்தான். (அல் அன்ஃபால், 8:11),  
''(மனிதர்களே) நாம் தாம் வானத்திலிருந்து பரிசுத்தமான நீரை இறக்கியும் வைக்கிறோம்." (அல்ஃபுர்கான், 25:48)
இறைவனின் பரிசுத்தமாக இறக்கிவைத்த தண்ணீரை மாசுபடுத்தி சீரழிக்கும் மனித சமூகத்தினை என்னவென்று கூறுவது? இன்று எந்தத் தண்ணீர் இறைவனது அருட்கொடையோ அதனை இன்று மனித வாழ்வை சீரழிக்கும் சாராய மதுபான வகைகளுக்கு பயன்பத்தும் இழிநிலைக்கு மனித சமூகம் சென்றுவிட்டது. இந்த 50 வருடங்களில் பெருகிவிட்ட தொழிற்சாலைகள், இவற்றின் கழிவுகள் முறையாக சுத்திகரிக்க படாமல், நேரிடையாக கலப்பதால், நீர்நிலைகளும், வயல்களுக்கு இடப்படும் இராசயன உரங்கள், பூச்சிகொல்லிகள் இவற்றால் நிலத்தடி நீரும் பெருமளவு மாசுபட்டு போகின்றன.
நமது முக்கியமான நீராதாரம் நிலத்தடி நீராகும். விவசாயம், நமது அன்றாட தேவைகளுக்கு நிலத்தடி நீரையே உறிஞ்சுகிறோம்.
எனவே இதுத்தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படவேண்டும். தண்ணீரை வீண்விரயம் செய்யாமல் முறையாகப் பயன்படுத்த வேண்டும். நமது சுற்றுப்புற சூழலை மாசுப்படாமல் பாதுகாக்க வேண்டும். நமது தேவை போக மீதமான தண்ணீரை பிறருக்கு கொடுக்கும் மனோநிலையும் நமக்கு வரவேண்டும்.

Diseases spread through water & Precautions

தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் & தடுக்கும் வழிகள்
ஒரு மனிதன் உணவு இல்லாமல் ஒரு மாதம் இருக்க முடியும். ஆனால் தண்ணீர் இல்லாமல் ஒரு வாரம் கூட வாழ முடியாது. இதுவே வாழ்க்கைக்கும் தண்ணீருக்கும் உள்ள பிரிக்க முடியாத பந்தத்தை நமக்கு விளக்குகிறது.
ஒரு சராசரி மனிதன் தினமும் இரண்டரை லிட்டர் தண்ணீரை உடலிலிருந்து வெளியேற்றுகிறான். உடலிலிருந்து தண்ணீர் வெளியேறும் அளவுக்குத் தக்கபடி அவனுடைய உடல் தண்ணீரை எதிர்பார்க்கும், அதை மனதில் கொண்டு சுத்தமான தண்ணீரை குடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
நாம் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருக்கும் போது நம்முடைய உடலிலுள்ள செல்கள் தண்ணீரின் தேவைக்காக இரத்தத்தை நாடுகின்றன. உடனே இதயம் வேகமாகத் துடிக்கத் துவங்குகிறது.
இதனால் சிறுநீரகம் தன்னுடைய பணியான இரத்தத்தைத் தூய்மையாக்கும் செயலை முழுமையாகச் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறது. எனவே சிறுநீர கத்தின் பணிகள் லிவர் போன்ற மற்ற உறுப்புகளுக்குத் தாவுகின்றன. உடலே ஒரு அழுத்தமான சூழலுக்குத் தள்ளப்படுகிறது.
இத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு என்னவென்று நினைக்கிறீர்கள் ? தீர்வு, மிக மிகச் சுலபம். சுத்தமான தண்ணீரை அவ்வப்போது அருந்தி வருதல் ! அவ்வளவே.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிப்பது பெரும்பாலான நோய்களைக் குணமாக்கும் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா ?
* காலையில் எழுந்தவுடன் உடனடியாக, பல் தேய்ப்பதற்கு முன்பே, ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
நாம் தினமும் பருகும் குடிநீர் சுத்தமானதாக இல்லையென்றால், நமக்கு நாமே பல வியாதிகளுக்கு அடித்தளம் போட்டுக் கொள்கிறோம் என்று அர்த்தம்.
நீரினால் ஏற்படும் நோய்களை (Water borne diseases) நான்கு வகையாக பிரிக்கலாம்
  • Water Dispersed Diseases Borne – நீரினால் பரவும் பிணிகள். உதாரனம் காலரா
  • Water Based Diseases – நீரை அடிப்படையாக கொண்ட பிணிகள் : இந்த நோய் ஏற்படுத்தும் கிருமியின் வாழ்க்கை சுழற்சியின் ஒரு பகுதி நீரில் இருக்கும். உதாரணம்: நரம்புச்சிலந்தி
  • Water related Diseases  – நீருடன் தொடர்புடைய பிணிகள் இந்த நோயை பரப்பும் கிருமி இருக்கும் / வளரும் பூச்சிகள் நீரில் இருப்பதால் உதாரணம் மலேரியா, சிக்குன்குனியா
  • Water Washed Diseases- நீர் பற்றாக்குறையால் ஏற்படும் பிணிகள் -தண்ணீர் பற்றாக்குறையால் தனிமனித சுகாதாரம் பேண முடியாததால் ஏற்படும் நோய்கள் . உதாரணங்கள் – Trachoma, Scabies, Typhus, Ring worm (படர்தாமரை)
நீரினால் பரவும் பிணிகள் பரவுவதற்கு முக்கிய காரணம், மனித மலம் குடிநீரில் கலந்து விடுவது தான், காலரா மட்டுமல்ல, டைபாய்டு, போலியோ, கல்லீரல் அழற்சி வகை A (Hepatitis Virus Type A) போன்ற பல நோய்கள் இப்படி தான் பரவுகின்றன
இதில் வயிற்றுப்போக்கு, காலரா போன்ற பிணிகள் மரணத்தை ஏற்படுத்தக்கூடியவை
இது போன்ற நீரினால் பரவும் நோய்களை தடுக்கும் வழிகள்
1.        மலம் குடிநீரில் கலக்காமல் தடுப்பது திறந்த வெளிகளில் மலம் கழிக்காமல் இருப்பது. அனைவரும் நவீன கழிவறைகளை உபயோகிப்பது. இதனால் தான் அரசு கழிவறை கட்ட நிதியுதவி அளிக்கும் திட்டமெல்லாம் வைத்திருக்கிறது
2.        கழிவு நீரும் குடிநீரும் கலக்காமல் தடுப்பது - குடிநீர் வடிகால் வாரியத்தின் பணி
3.        நீரில் குளோரின் கலப்பது நகராட்சி / குடிநீர் வடிகால் வாரியத்தில் பணி. உங்கள் பகுதியில் இருக்கும் மேல் நிலை நீர் தேக்க தொட்டியில் தினமும் குளோரின் கலக்கப்பட வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா ?? அந்த குறைந்த பட்சம் வாரம் ஒரு முறை 
4.        நீரை காய்ச்சி, வடிகட்டி பருகுவது - நீங்கள் செய்யவேண்டியது
5.        கைகளை நன்றாக கழுவ வேண்டியது இதுவும் நீங்கள் செய்ய வேண்டியதுதான் 

தண்ணீரை காய்ச்சிக் குடிப்பதன் தேவை குறித்தும், தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் குறித்தும் நம்மிடம் விவரிக்கிறார், சென்னையைச் சேர்ந்த பிரபல டாக்டர் எஸ். அமுதகுமார்.
குடிக்கப் பயன்படுத்தும் தண்ணீர் சுத்தமானது தானா? கிருமிகளற்றதா? என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. எனவே தண்ணீரை எப்போதும் காய்ச்சி, வடிகட்டி உபயோகப்படுத்த வேண்டும்.
நகரப் புறங்களில் மட்டுமின்றி கிராமப் புறங்களிலும் குடிநீர் மூலம் நிறைய நோய்கள் பரவுகின்றன. மேல்நிலை நீர்த் தொட்டிகள் மாதக் கணக்கில் சுத்தப்படுத்தப்படாமல் இருக்க வாய்ப்புண்டு.     எனவே அதை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
உடலில் ஏற்படும் நோய்களில் 75 சதவீதம் குடி தண்ணீரால் தான் வருகிறது.
வாந்தி, பேதி, டைபாயிடு, காலரா போன்றவை தண்ணீர் மூலம் தான் பரவுகின்றன.
ஐஸ் தண்ணீர் குடிக்க விரும்புவர்கள், காய்ச்சிய நீரை குளிர்ப் பதனப் பெட்டியில் வைத்து  பயன்படுத்த வேண்டும். தண்ணீரை வெறுமனே சூடு படுத்திக் குடிக்காமல், நன்கு கொதிக்க வைத்தால் தான், அதிலுள்ள கிருமிகள் மடியும்.
குடிநீர் தான் மனித உடலின் ஆதாரம். அந்த நீரை காய்ச்சிக் குடித்து  நம்மை பழக்கப்படுத்திக் கொண்டு நோய்களில் இருந்து விடுதலை பெறுவோம்.

Water Borne Diseases and Prevention Methods